அரபிக் கடலில் மூன்று மணிநேரத்தில் 17கி.மீ நீந்தி கடந்த 11 வயது சிறுமி வேதஸ்ரீ தோராஸ்கர்

ஆளுமை/விருது இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சிறப்பு செய்திகள் நிகழ்வுகள் பெண்கள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

வயது என்பது வெறும் எண் என்பதை 11 வயது சிறுமியான வேதஸ்ரீ தோராஸ்கர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். அரபிக் கடலின் சவாலான அலைகளைத் தாண்டி, அடல் சேதுவிலிருந்து கேட்வே ஆஃப் இந்தியா வரையிலான 17 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 3 மணி நேரம் 5 நிமிடங்களில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
வேதஸ்ரீ-ன் சாதனைப் பயணம்
அதிகாலைப் பொழுதில் கடலில் தனது சாதனை பயணத்தைத் தொடர்ந்த வேதஸ்ரீ, தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேல் நீந்தி, தனது அசாதாரண திறமையையும், மன உறுதியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நீச்சல் குளத்தில் நீந்துவதைப் போலல்லாமல், திறந்த கடலில் அலைகள், நீரோட்டங்கள், குளிர்ந்த நீர் போன்ற பல சவால்களை எதிர்கொண்டு இறுதியாக அவர் தனது இலக்கை வெற்றிகரமாக அடைந்தார்.
வைரலான வீடியோ & நெட்டிசன்கள் வாழ்த்து
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அவரது சாதனைப் பயணத்தின் வீடியோ, தொடக்கத்தில் நம்பிக்கையுடன் குதிக்கும் தருணத்திலிருந்து சவாலான அலைகளைக் கிழித்து முன்னேறுவதுவரை அவரது பயணம் முழுவதையுமே பதிவு செய்கிறது. இந்த வீடியோ ஏற்கனவே 7 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான பாராட்டுகளையும் பெற்றுள்ளது. பலரும் வேதஸ்ரீயின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *