சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா T20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் விளையாட்டு

இந்திய – தென் ஆப்ரிக்கா இடையிலேயான நான்காவது ‘டி-20’ போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இணைந்து ஆடியது, அந்த போட்டி இந்தியாவிற்கு வரலாற்று சாதனையாக அமைந்தது. தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் இந்திய அணி தற்போது 2-1 என முன்னிலையில் உள்ளது. நேற்றைய போட்டி ஜோகனஸ்பர்க்கில் நடைபெற்றது, இதில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர். அபிஷேக் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு அதிக ரன்களை குவிக்க தொடங்கினர்.திலக் வர்மா 47 பந்துகளில் 10 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் குவித்தார், மேலும் சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 9 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் அடித்து அசத்தினார். இருவரும் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து விளையாடினர். இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து,283 ரன்கள் குவித்தது .இந்திய அணியின் டி-20 போட்டிகளில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இப்போட்டியில் 23 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை உருவாக்கப்பட்டது. 93 பந்துகளில் 210 ரன்கள் எடுக்கப்பட்டன. புதிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இணையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *