குழந்தைகள் தினம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் விஜய் சார்பில் கேக் மற்றும் வாழ்த்து அட்டை

அரசியல் கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் சிறப்பு செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்நாடு

நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் சிறப்புப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் கீழ், சுமார் 61.84 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.9.27 கோடி மதிப்பீட்டில் தலா 45 கிராம் எடையுள்ள ஸ்பாஞ்ச் கேக் துண்டுகள் வழங்கப்பட உள்ளன. பிரபல நிறுவனங்களிடம் இருந்து சாக்லேட், வெண்ணிலா மற்றும் பழச்சுவைகளில் இந்த கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.கேக்குடன் சேர்த்து, முதலமைச்சர் விஜய் அவர்களின் கையொப்பத்துடன் கூடிய சிறப்பு வாழ்த்து அட்டையும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில், “All is Well Confident-ஆ இருங்க.. பிரியமுடன் விஜய்” என்ற ஊக்கமளிக்கும் வாசகம் இடம்பெற்றுள்ளது. குழந்தைகள் தினத்தன்று மாணவர்களுக்குப் பாதுகாப்பாகவும் இவற்றை விநியோகிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தச் செய்தியை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *