ஆசிய போட்டியில் முதல் தங்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி; பதக்க வேட்டையை ஆரம்பித்த இந்திய வீரர்கள்

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சீனா செய்திகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 2-ம் நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளி உட்பட 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடக்க விழா நடைபெற்ற நிலையில் நேற்று 2-ம் நாள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
துடுப்புப் படகுப் போட்டியில் மட்டும் 3 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது. மகளிர் கிரிக்கெட்டில் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் தங்கம் வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *