திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு 90 வயதில் கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தியானம், மன அமைதி மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் அவரது பேசும் புத்தகத்திற்காக (Spoken Word Album) இந்த சர்வதேச இசை விருது வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மனஅமைதி மற்றும் கருணை செய்தியை பரப்பி வரும் தலாய் லாமாவின் குரலும் கருத்துகளும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.விருது வழங்கும் விழாவில் தலாய் லாமா நேரில் பங்கேற்க முடியாததால், அவரது சார்பில் இசையமைப்பாளர் ருபுஸ் கிராமி விருதை பெற்றுக் கொண்டார். இதன் மூலம் கிராமி விருது பெறும் வயதான நபராக தலாய் லாமா புதிய சாதனை படைத்துள்ளார். இந்த விருது ஆன்மிகம், தியானம் மற்றும் மனநலத்துக்கு உலக அளவில் கிடைக்கும் முக்கிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. உலகத் தலைவர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் தலாய் லாமாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

