காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவுக்கு எதிரான முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, இஸ்ரேல் ராணுவம் அங்கு தாக்குதல்களை அதிகரித்துள்ளது. கடந்த 18ம் தேதி, காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், காசா சுகாதாரத்துறை அமைச்சகம், பள்ளிக்கூடத்திற்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது. இதில் 14 குழந்தைகள் மற்றும் 5 பெண்கள் உள்ளனர்.இந்த தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், காசாவின் மற்ற பகுதிகளில் நேற்று இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 100 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

