எல் நினோவால் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்

செய்திகள்

காரணமாக அடுத்த ஆறு மாதங்களில் உலகம் முழுவதும் சுமார் 4.51 லட்சம் பேர் கூடுதலாக வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழக்கக்கூடும் என அமெரிக்காவின் Climate Impact Lab ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. இந்த கணிப்பு, வழக்கமான ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ஏற்படக்கூடிய கூடுதல் வெப்ப உயிரிழப்புகளை அடிப்படையாகக் கொண்டது. செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரை உலகின் பல பகுதிகளில் கடும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும், குறிப்பாக ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதி மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் இந்த காலகட்டத்தில் சுமார் 15,800 கூடுதல் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது; இதில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் கணிசமான உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் சுமார் 31,400 பேரும், இந்தோனேசியாவில் 19,300 பேரும், சூடானில் 17,600 பேரும் உயிரிழக்கக்கூடும் என ஆய்வு மதிப்பிட்டுள்ளது. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிப்பதால் உருவாகும் இயற்கையான காலநிலை நிகழ்வு ஆகும். இதனால் உலகின் பல பகுதிகளில் வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் வானிலை முறைகளில் மாற்றங்கள் ஏற்படுவதுடன், வறட்சி, காட்டுத்தீ மற்றும் வெள்ளம் போன்ற பாதிப்புகளும் அதிகரிக்கலாம். தற்போதைய எல் நினோ நிகழ்வு ஏற்கனவே அதிக வெப்பநிலையுடன் கூடிய சூழலில் உருவாகியுள்ளதால் அதன் தாக்கம் மேலும் தீவிரமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *