1991 மே 21 ; காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூரில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்தது.
1991 ஜூன்: 19 வயது பேரறிவாளன் சிபிஐ அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், வெடிகுண்டுக்கு தேவையான பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
1998: பேரறிவாளன் உட்பட 25 பேருக்கு மரண தண்டனை விதித்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது
மே 1999: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அதில் 9 பேர் விடுவிக்கப்பட்டனர். பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
பிப்ரவரி 2014: பேரறிவாளன் அனுப்பிய கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் தாமதப்படுத்தியதை காரணம் காட்டி, பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
2015 டிசம்பர்: அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பினார்.
2016 மார்ச்: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டி தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது.
2017 நவம்பர்: பேரறிவாளனுக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எந்த தொடர்பும் இல்லை என சிபிஐ முன்னாள் விசாரணை அதிகாரியான தியாகராஜன் தெரிவித்திருந்தார்
2018 செப்டம்பர்: அதிமுக ஆட்சிக் காலத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
2021 ஜூன்: தனது மகனை நிரந்தரமாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, அற்புதம்மாள் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்
2022 மார்ச்: வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில், அவருக்கு முதல் முறையாக ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2022 மே: உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.