ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்.

செய்திகள்

இங்கிலாந்தில் நடைபெறும் 10வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஜூன் 12) கோலாகலமாக தொடங்குகிறது. ஜூலை 5 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்று 33 போட்டிகளில் மோதுகின்றன.இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் குரூப்-1ல் இடம் பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான நியூஸிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகள் குரூப்-2ல் உள்ளன.தொடக்கப் போட்டியில் இன்று இரவு இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 14ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வலுவான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலத்துடன் களமிறங்குகிறது. கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்தியா, இந்த முறையும் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.இதுவரை 9 முறை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா 6 முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *