உக்ரைன் ரஷ்யா போர் உலக பங்குச்சந்தை நிலவரத்தில் கடுமையாக எதிரொலிக்கிறது. இந்நிலையில் 30 ஆண்டுகாலமாக உலக பங்குச்சந்தைகளில் முதலீடுகளை செய்து வரும் மார்க் மொபியஸ் இந்திய பங்குச்சந்தைகள் 30 சதவீதம் வரைக் கூட விழக்கூடும் என கணித்துள்ளார்.
தற்போது, நிப்டி அதன் உச்சநிலையில் இருந்து 12 சதவீதம் குறைந்துள்ளது. ஐ.டி., வங்கி, உலோகப் பங்குகள், மருந்து நிறுவனப் பங்குகள், ரியல் எஸ்டேட் துறைப் பங்குகள் அனைத்தும் வீழ்ச்சியில் உள்ளன.
இந்தநிலையில் பிரபல பங்குச்சந்தை நிபுணர் மார்க் மொபியஸ் ஒரு பேட்டியில் கூறியதாவது: பங்குச்சந்தைகள் மேலும் வீழ்ச்சி அடையக்கூடும். இந்திய குறியீடுகளான நிப்டி அதன் உச்சத்திலிருந்து 30 சதவீதம் வரை சரியலாம். ஆனாலும் மீண்டு வரும் நம்பிக்கை உள்ளது. இந்திய சந்தை உலக சந்தைகளை விட சிறப்பாக செயல்படும். குறைந்த கடன் மற்றும் வலுவான விலை நிர்ணயம் செய்யும் இந்திய நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்