இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் 66,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து காசா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த அக்டோபர் 2023-ல், இஸ்ரேலுக்குள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பிறகு, உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 66,005-ஆக உயர்ந்துள்ளது. இதில் 79 பேர் கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,68,162 பேர் காயமடைந்துள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பர் உடன் திங்கள்கிழமை அன்று சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் நெதன்யாகு வாஷிங்டனில் இருக்கும் நிலையில் காசா மீதான இஸ்ரேலிய படைத் தாக்குதல் தொடர்கிறது.

