தனியார் நர்சரி கார்டன்களில் மரக்கன்றுகளுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை செய்து அரசாணை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் வனவிலங்குகள்

நர்சரி நிறுவனங்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை அடுத்து தனியார் நர்சரிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன விலங்குகள் பாதுகாப்பு, யானைகள் வேட்டை தடுப்பு, வன அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி பாரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வன குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவில் எவரும் நியமிக்கப்படவில்லை என்பதால் மார்ச்சு 16-ம் தேதிக்குள் பிரதிநிதியை நியமித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் மின் வேலிகளால் விலங்குகள் பலியாவதை தடுக்க மின்வேலிகள் அமைப்பது தொடர்பான விதிகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் வலியுறுத்தினார். அதனடிப்படையில் விதிகளாய் இறுதி செய்யும் வரை விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மின்வேலிகளை அமைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வனத்துறையில் காலியாகவுள்ள 1163 பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தக்கல் செய்ய நீதிபதிகள் ஆணையிட்டனர்.
இந்நிலையில், வனப்பகுதியில் தடையை மீறி தனியார் நர்சரிகள் மரக்கன்றுகளை பிளாஸ்டிக் கவர்களில் எடுத்து செல்வதாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் நர்சரி நிறுவனங்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை அடுத்து தனியார் நர்சரிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இது தொடர்பான வழக்கை ஏப்ரல் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *