நாடாளுமன்ற ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசனின் சொத்துமதிப்பு விவரம் வெளியீடு

அரசியல் இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளின் காலம் முடிவடையும் நிலையில், திமுக 4 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்தது.
அதன்படி, திமுக சார்பில் வழக்கறிஞரும், எம்.பி.யுமான வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் மாநிலங்களவை உறுப்பினருக்காகப் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில், வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று அனைவரும் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் நேற்று தனது வேட்புமனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னிலையில் தாக்கல் செய்தார்.
இந்த வேட்புமனு மூலம் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 2023-24-ஆம் நிதியாண்டில் வருவாய் ரூ.78.90 கோடி எனவும், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி என்றும், ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடனாக ரூ.49.67 கோடி உள்ளதாகவும், கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.2.60 லட்சம் எனவும், மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, லெக்ஸஸ் ஆகிய நான்கு கார்கள் உள்ள நிலையில் இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *