இசையமைப்பாளர் இளையராஜா குறித்து ‘கருப்பு’ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.‘கருப்பு’ படத்தை தயாரித்த Dream Warrior Pictures வெளியிட்ட அறிக்கையில், படத்தில் இளையராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்ட காட்சி எந்தவித உள்நோக்கமும் இல்லாமல், கதையின் செய்தியை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.மேலும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகில் சாதனை படைத்து வரும் இளையராஜாவை காயப்படுத்தவோ அல்லது அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவோ படக்குழுவிற்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த காட்சியால் இளையராஜா, அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் அல்லது பிறர் யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அதற்காக தங்களின் தாழ்மையான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

