கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள எஸ்.நரையூர் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலை புதுப்பிக்க திட்டமிட்ட அப்பகுதி மக்கள், மரங்களை அகற்றியுள்ளனர். இதற்கிடையில், கோயில் சுவரில் உள்ள கருங்கல்லில் எழுத்துகள் காணப்பட்டதைப் பார்த்து, விழுப்புரம் வரலாற்று கல்வெட்டு மற்றும் ஆராய்ச்சி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்களுக்கு தகவல் வழங்கினர். அவர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களின் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு என கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்பான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆய்வுகளுக்கு பின் முழு விவரம் தெரியவரும் என கல்வெட்டு மற்றும் ஆராய்ச்சி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

