கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கல் செய்து பேசினார். மலையாளத்தில் ‘கேரளம்’ என்று அழைக்கப்படும் மாநிலம், பிற மொழிகளில் கேரளாவாகவே உள்ளது என்று கூறினார். எனவே கேரளம் என்ற பெயரையே, அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. இதையடுத்து, எவ்வித திருத்தமும் இன்றி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

