நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறும் போது அவைகளை உடனடியாக ஒத்திவைக்கப்படுவது. அதானி தொடர்பான கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகள் நாடாளுமன்றத்தில் எழும்போது, அவற்றை புறக்கணித்து, நாடாளுமன்ற அவைகளை ஒத்திவைக்கும் நடவடிக்கைகள், உழைக்கும் வகுப்பினரின் மீது சுரண்டல்களை ஊக்குவிக்கும் போக்காகவே அமைந்துள்ளது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இன்று (நவம்பர் 25) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அதானியின் ஊழல் குறித்து விவாதம் நடத்த வேண்டும், கேரளாவின் வயநாடு நிலச்சரிவிற்கான நிவாரண நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டும், மற்றும் மணிப்பூர் கலவரத்திற்கான தீர்வு எப்போது என்பதற்கான விவாதம் தேவை எனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நாடாளுமன்றத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. இதன் விளைவாக, அதானி விவகாரம், வயநாடு நிலச்சரிவு, மணிப்பூர் கலவரம் போன்ற விவாதங்கள் நடைபெறாமல், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு முழு நாளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

