ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அணி அசத்தல்

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பாகிஸ்தான் மற்றவை விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அணி அசத்தியுள்ளது. 7 வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஏற்கனவே ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி மற்றும் மலேசியா அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதி லீக் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி பாகிஸ்தானை 4-0 என்ற கோள் கணக்கில் வீழ்த்தி வெற்றியை தன்வசப்படுத்தியது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 13 புள்ளிகள் பெற்று இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று ஜப்பானை அரையிறுதி போட்டியில் சந்திக்கிறது இந்தியா. அதே போல அன்றைய தினமே மலேசிய அணி கொரியாவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.