தாம்பரம் அடுத்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு விழா மேடை அமைப்பதற்காக இடம் தேர்வு தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் முடிந்து விரைவில் திறப்பு விழா நடைபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
இந்த பேருந்து நிலையத்தால் நகருக்குள் ஏற்படும் வாகன நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இரண்டு இரவுகளில் நடைபெற்று முடிந்தது. ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் அமைக்கும் பணி விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய நுழைவு வாயில் 40 நாட்களில் பணி நிறைவடைந்து திறக்கப்பட உள்ளது. நவம்பர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைய ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

