குஜராத்தில் வசித்து வந்த பிரதமர்மோடியின் தாயார் காலமானார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் காலமானார். பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அம்மாவை குறித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது. துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை தனது தாயாரிடம் உணர்ந்தேன் . புத்திசாலித்தனத்துடன் வேலை செய்ய வேண்டும்; தூய்மையான வாழ்க்கையை வாழ வேண்டும். 100வது பிறந்தநாளில் எனது தாயார் சொன்ன விஷயம், எப்போதும் நினைவில் இருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
புதுடில்லியில் இருந்து ஆமதாபாதுக்கு வந்த பிரதமர், காலை 9:30க்கு தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். அடுத்த ஒன்றரை மணி நேரத்திலேயே தன் பணிக்கு திரும்பிய பிரதமர், ‘வந்தே பாரத்’ ரயில் சேவை துவக்க விழாவில் பங்கேற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ‘கடமை’ என்ற மூன்றெழுத்துக்கு முன்னுதாரணமாக பிரதமர் மோடி திகழ்வதாக, நாடு முழுதும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *