நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ஜெய்லர். ரம்யா கிருஷ்ணன், வசந்த ரவி, யோகி பாபு மற்றும் விநாயகம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் 500 கோடிகளுக்கும் மேல் வசூலித்து பெரும் வெற்றியடைந்தது. மேகன்லால்,சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப் மற்றும் சுனில் ஆகியோரின் சிறப்பு தோற்றமும் ரசிகர்கள்களிடம் வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து ஜெய்லர் 2 படபிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்திருந்த நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் ஜெய்லர் 2 படத்தின் ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி அடுத்த ஆண்டு ஜூன் 12 ரீலீஸ் என்றார். இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
