இலங்கை நிதி அமைச்சராகவும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு

NRI தமிழ் டிவி இலங்கை உலகம்

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதற்கு முன் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி விலகினர். அங்கு கடும் நெருக்கடி நிலையும் கலவரங்களும் நிலவி வந்தன.

இதனையடுத்து ரனில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அதோடு வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், நிதியமைச்சர் மட்டும் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது.

இலங்கை இருக்கும் நிலையில் யாரும் ஏற்கத் துணியாத அந்த துறையையும் தானே ஏற்று, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, நிதியமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில், அவர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *