மக்களவையில் கடும் அமளி: காங்கிரஸ் எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம்

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள்

இந்தியா–சீனா எல்லை மோதல் தொடர்பாக முன்னாள் ராணுவத் தளபதி நரவணே தனது நூலில் கூறிய கருத்துகளை மக்களவையில் ராகுல் காந்தி மேற்கோள் காட்டி பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கூட்டணி எம்.பிக்கள் கூச்சலிட்டதால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது, “சீன டாங்குகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக நரவணே எழுதியது உண்மை” என ராகுல் காந்தி கூற, உறுதிப்படுத்தப்படாத ஆவணங்களை குறிப்பிடக் கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தார்.இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து, காங்கிரஸ் எம்பிக்கள் காகிதங்களை கிழித்து எறிந்ததால் அவை ஒழுங்கீனமான சூழ்நிலையில் மாறியது. இதையடுத்து, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக கூறி 8 காங்கிரஸ் எம்பிக்களை இந்த கூட்டத் தொடரின் மீதமுள்ள காலத்திற்கு இடைநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *