தவெக சார்பில் பிப்.6 முதல் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களுக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 6 முதல் தொடங்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகரும் கட்சித் தலைவருமான விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றுத் தரும் நல்லாட்சியை வழங்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறினார். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி, விருப்ப மனுக்கள் பிப்ரவரி 6, 2026 முதல் பிப்ரவரி 14, 2026 வரை தவெக தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படும். பிப்ரவரி 6 அன்று நண்பகல் 12 மணி முதல் மனுக்கள் வழங்கப்படும். மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மனுக்கள் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *