கமல் நடிப்பில் இந்தியன்2; இந்தாண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

THE RISE அரசியல் இசை இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸாகும் தேதி குறித்து படக்குழுவினர் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளனர்.
கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன்2 22 ஆண்டுகளுக்கு பின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் உருவாகும் என்று கூறினர். மேலும் அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு இது பிரச்சார படமாக இருக்கும் என கருதினர்.
எனவே 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடுவது எனவும் முடிவெடுத்து வேலை செய்தனர். ஆனால் படப்பிடிப்பு தாமதம் ஆனது. அத்துடன் படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர். இதனால் பல சிக்கல்களை சந்தித்தது இந்தியன் 2. அதன்பின் இயக்குனர் ஷங்கர் – தயாரிப்பாளர் சுபாஸ்கரன் – நடிகர் கமல்ஹாசன் தரப்புக்கு இடையே கருத்து வேறுப்பாடு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு முற்றிலும் நின்றது.
அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து பலகட்டப் பேச்சுவார்த்தைக்கு பின் இந்தியன் 2 படம் தொடங்கியது. இரண்டாவது பாகம் எடுக்க தொடங்கிய சங்கர் அதில் அதிக காட்சிகளை படமாக்கியதால் இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்களாக மாற்றினார். இதனால் இந்தியன் 3 திரைப்படம் போனஸாக கிடைத்தது. ஆனால் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற தகவலே இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டனர். ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்தபோதிலும் மேலும் சில காரணங்களால் வேலைகள் தாமதமாக, அந்தப் படம் தற்போது ஜூன் மாதம் வெளியாகும் என அறிவித்திருக்கின்றனர். இதன் மூலம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் வெளியாக வேண்டிய இந்தியன் 2 திரைப்படம், தற்போது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு வெளியாகிறது என அறிவித்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *