தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து. சென்னை தாம்பரத்தில் இருந்து தாம்பரம் சானிடோரியம் நோக்கி பயணித்த காலி சரக்கு ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தாம்பரம் மற்றும் சானிடோரியம் இடையே வாகனங்களை ஏற்றிச் செல்லும் காலி சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிலைநாட்டுவதற்கான பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

