நியூயார்க் உள்பட அமெரிக்க வடகிழக்கில் பனிப் புயல்: அவசர நிலை அறிவிப்பு.

அமெரிக்கா உலகம் செய்திகள்

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடும் பனிப்புயல் வீசத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நியூயார்க் நகரில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவைகள் தொடர்பான வாகனங்களைத் தவிர மற்ற அனைத்து வாகன போக்குவரத்துக்கும் நியூயார்க் மேயர் மம்தானி தடை விதித்துள்ளார்.கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றுடன் பனிப்புயல் தாக்குவதால், மக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நியூஜெர்சி உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்கனவே 90,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.மேலும் பாஸ்டன், கனெக்டிகட், டெலாவெர், மேரிலேன்ட், விர்ஜீனியா போன்ற மாநிலங்களிலும் பனிப்புயல் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெலாவெர், மேரிலேன்ட், விர்ஜீனியா மாநிலங்களில் மட்டும் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிகாரிகள் மீட்பு மற்றும் அவசர உதவி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *