ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் படத்தின் புரமோ வெளியீடு: விரைவில் படப்பிடிப்பு

சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு பொழுதுபோக்கு

ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை எழுதி இயக்குகிறார்.இதற்குப் பிறகு, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ளனர். கடந்த 1981ஆம் ஆண்டு வெளியான ‘தில்லு முல்லு’ படத்திற்கு பிறகு 46 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.இந்த படத்தின் புரமோ வீடியோ இன்று பிற்பகல் 12.07 மணிக்கு வெளியானது. புரமோவில் கமல்ஹாசனுக்கு இரண்டு ஜாக்கெட்டுகள் காட்டப்படுகின்றன. அவர் ஒன்றை தேர்வு செய்யும் போது, அதை ரஜினிகாந்த் ஏற்கனவே தேர்வு செய்துவிட்டார் என்று இயக்குனர் நெல்சன் கூறுகிறார். அதேபோல் ரஜினிகாந்துக்கு இரண்டு கடிகாரங்கள் காட்டப்படுகின்றன. அவர் ஒன்றை தேர்வு செய்யும் போது, அதை கமல்ஹாசன் எடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.பின்னர் இருவரும் தனித்தனி அறைகளில் இருந்து முழு ஸ்டைலில் வெளியே வருகிறார்கள். கார் ஷெட்டில் செல்லும் அவர்கள், ஒரு காரில் அமருகின்றனர். பின்சீட்டில் நெல்சன் மற்றும் அனிருத் அமர்ந்திருக்கின்றனர். “இதில் ஹீரோ யார்?” என்று கமல்ஹாசன் கேட்க, ரஜினிகாந்தும் கேள்வியை தூண்டுகிறார். அதற்கு நெல்சன் பதில் சொல்லாமல் சிரிக்கிறார். கார் வேகமாக செல்கிறது. இதன் மூலம் புரமோ முடிகிறது.இந்த படம் விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புரமோ வெளியானதும் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *