தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமடைந்தார். இதனிடையே நடிகர் ரோபோ ஷங்கருக்கு சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சினிமாவில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்டார். பின்னர் உடல்நலம் தேறி மீண்டும் சினிமாவில் ஆக்டிவாக நடித்து வந்தார். இதனிடையே நடிகர் ரோபோ சங்கருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி செப்டெம்பர் 18ம் தேதி இரவு 8:30 மணியளவில் உயிரிழந்தார் என மருத்துவமனை தகவல் வெளியிட்டது. அவருக்கு வயது 46. அவரது இறப்பு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோபோ சங்கரின் மறைவிற்கு அவரது குடும்பத்தினற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், திரைத் துறையினர், ரசிசர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
