பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மறைந்த தினம் இன்று.கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் மறைதார். இந்நிலையில், அவரின் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் முக்கியமான நபராகக் கருதப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 50,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட பிறகு மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் காம்தார் தெருவிற்கு அவரது பெயரை வழங்க வேண்டும் என எஸ்.பி.பி.சரண் தமிழக முதல்வரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் S.P.B யின் திரையுலக கலைச் சேவையை மதிப்பீடு செய்து, அவரது நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த சாலைக்கு SPB பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

