இந்திய தொழிலதிபர்களுக்கு விசா ரத்து செய்தது அமெரிக்கா. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் ஜோர்கன் ஆண்ட்ரூஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, ‘ பென்டானில் ‘ போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையாக கண்டறியப்பட்ட இந்திய நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் விசாக்களை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் .கடந்த ஓராண்டில் போதைப்பொருளால் 48,000 பேர் பலியாவதற்கு பென்டானில் காரணமாக இருந்துள்ளது. மீண்டும் அவர்கள் எதிர்காலத்தில் விசாவுக்கு விண்ணப்பித்தால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த நடவடிக்கையானது, அமெரிக்க குடியேற்ற மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, விசா ரத்து செய்யப்பட்ட தனிநபர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவுக்குச் செல்லத் தகுதியற்றவர்கள் ஆகலாம்’ என கூறி உள்ளார்

