டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி. ஆட்சியை இழந்தது ஆம் ஆத்மி கட்சி.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தேர்தல் செய்திகள் 2024 முதன்மை செய்தி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தது. இந்நிலையில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களைக் பா ஜ கா வும் , ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளை வென்று ஆட்சியை இழக்கிறது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம் என்று முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பாஜக வெற்றியை முன்னிட்டு பாஜக ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, பாஜகவிற்கு கிடைத்த வெற்றியை முன்னிட்டு தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் மோடி “ஜன சக்தி உயர்ந்தது! வளர்ச்சி வென்றது, நல்லாட்சி தழைத்தது. டெல்லி மக்களின் இந்த வரலாற்று வெற்றிக்கான தீர்ப்பிற்கு நான் தலைவணங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *