வீடுகளில் அடைந்து கிடக்கும் இந்த பெருந்தொற்று காலத்தில், நம்மின் மனபாரங்களைக் குறைப்பதிலும், நேரத்தைக் கடத்துவதிலும் பெரும் பங்காற்றிடுவது தொலைக்காட்சிப் பெட்டி வழியாய் நம் இல்லங்களுக்கே வரும் சின்னத்திரை. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமான விதவிதமான நிகழ்ச்சிகளை அள்ளி வந்துக் குவிப்பதோடு பல பொழுதிகளில் வீடுகளில் தனிமையில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பெருந்துணையாக இருப்பது சின்னத்திரையே.
இன்றைய நவீன கால கட்டத்தில் சின்னத்திரையும் உருமாற்றம் பெற்றும் கைக்குள் சுருங்கி அடங்கிக்கொண்டுள்ளது. அத்தகைய சிறப்பு மிக்க சின்னத்திரையின் வாராந்திர நிகழ்வுகளையும் விஷேஷங்களையும் வரிசைப்படுத்துகிறது “இந்த வாரச் சின்னத்திரை” என்னும் இத்தொகுப்பு.
உலகில் அகிகம் பேரால் கண்டு இரசிக்கப்பட்டதில் மாபெரும் உலக சாதனையைப் படைத்த இராமாயணம் தொடர் மீண்டும் மறுஒளிபரப்பாக இருக்கிறது. தூர்தர்ஷனில் சனி மற்றும் ஞாயிறுகளில் 33 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பப்பட்டு வந்த இராமாயணம் தொடர் இப்பொழுது கலர்ஸ் தொலைக்காட்சி வாயிலாக தமிழ் மற்றும் இந்தியில் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் தொடரில், மாடல் அழகி பிக் பாஸ் புகழ் சம்யுக்தா சிறப்புத்தோற்றத்தில் நடிக்க இருப்பதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.
90’ஸ் கிட்சை பெரிதும் கவர்ந்திருந்த சக்திமானாக நடித்திருந்தவர் முகேஷ் கண்ணா, இவர் கொரோனாவால் இறந்து விட்டதாய் பரவிய வதந்தி பரபரப்பைக் கிளப்பியது.
சன் குழுமத்தின் அக்னி நட்ச்சத்திரம் தொடரில் நடித்து வரும் வசந்த் வசி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணைந்துள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வார டிஆர்பியில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா மற்றும் வானத்தைப் போல ஆகிய தொடர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மாவுக்கு டிஆர்பியில் சறுக்கல் தொடர்கிறது.
விஜய் டிவிக்கு ஆகமொத்தம் டிஆர்பியில் இந்த வாரம் சறுக்கல் ஏற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய தொடர்கள் முறையே மூன்று மற்றும் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த வார டாப் ஐந்து சேனல்களின் வரிசை பின்வருமாறு. சன் டிவி முதலிடத்திலும், விஜய், ஜீ, கே.டிவி மற்றும் விஜய் சூப்பர் ஆகிய சேனல்கள் இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.
- சந்தீப் குமார்