தவெகவின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதியதாக நிர்வாகக் குழு; தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தவெகவின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதியதாக நிர்வாகக் குழுவை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க. புதியதாக நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது. இந்தக் குழு பற்றிய விவரம் வருமாறு:
1. திரு. N.ஆனந்த் பொதுச்செயலாளர்

  1. திரு. ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
  2. திரு. Dr. K.G. அருண்ராஜ் Ex IRS. கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர்
  3. திரு. CTR. நிர்மல் குமார் இணைப் பொதுச்செயலாளர்
  4. திரு. A.ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர் பெரம்பலூர் மாவட்டம்
  5. திருமதி. C.விஜயலட்சுமி துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் மாவட்டம்
  6. திரு. A.ராஜசேகர் தலைமை நிலையச் செயலாளர் கடலூர் மாவட்டம்
  7. திரு. M.அருள் பிரகாசம் துணைப் பொதுச்செயலாளர் சென்னை மாவட்டம்
  8. திரு. M.சிவக்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் அரியலூர் மாவட்டம்
  9. திரு. A.பார்த்திபன் மாவட்டக் கழகச் செயலாளர் சேலம் மத்திய மாவட்டம்
  10. திரு. R.விஜய் சரவணன் மாவட்டக் கழகச் செயலாளர் தஞ்சாவூர் மத்திய மாவட்டம்
  11. திரு. M.சிவன் மாவட்டக் கழகச் செயலாளர் தருமபுரி மேற்கு மாவட்டம்
  12. திரு. M.பாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு மாநகர் மாவட்டம்
  13. திரு. V.சம்பத்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை மாநகர் மாவட்டம்
  14. திரு. M.சுகுமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாகப்பட்டிணம் மாவட்டம்
  15. திரு. S.R.தங்கப்பாண்டி மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்
  16. திரு. K.அப்புனு (எ) வேல்முருகன் மாவட்டக் கழகச் செயலாளர் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்
  17. திரு. B. ராஜ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கடலூர் கிழக்கு மாவட்டம்
  18. திரு. J.பர்வேஸ் மாவட்டக் கழகச் செயலாளர் புதுக்கோட்டை மத்திய மாவட்டம்
  19. திரு. A.விஜய் அன்பன் கல்லானை மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
  20. திரு. R. பரணிபாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்
  21. திரு. V.P.மதியழகன் மாவட்டக் கழகச் செயலாளர் கரூர் மேற்கு மாவட்டம்
  22. திரு. N.சதிஷ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாமக்கல் மேற்கு மாவட்டம்
  23. திரு. K. விக்னேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை தெற்கு மாவட்டம்
  24. திரு. M.வெங்கடேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு கிழக்கு மாவட்டம்
  25. திரு. S.ராஜகோபால் மாவட்டக் கழகச் செயலாளர் திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
  26. திரு. S. பாலசுப்பிரமணியன் கழக உறுப்பினர் தூத்துக்குடி
  27. திரு. டாக்டர். N.மரிய வில்சன் கழக உறுப்பினர் சென்னை மாவட்டம்
    எனது வழிகாட்டுதலின்படி இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழகத்தின் பொறுப்பாளர்கள். தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
    இதனை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயளாலர் ஆனந்த் வெளியிட்டுள்ள பதிவில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை காலை 10.00 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது என்றும் இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *