பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பையை இந்திய அணி 3வது முறையாக வென்றுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று (டிச.17), இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. முதலில் பேட் பிடித்த இந்தியா 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்தது. அடுத்து பேட் பிடித்த பங்களாதேஷ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்களுடன் தோல்வியடைந்தது. இவ்வகையில் இந்தியா 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
2012, 2017 ,2022 என 3 டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி வென்று சாதனை படைத்துள்ளது.