தென்னிந்தியாவின் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக தளபதி விஜய், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனது திரைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது, முழுநேர அரசியல்வாதியாக மாற முடிவு செய்துள்ளர். விஜயின் கடைசி திரைப்படமாக ‘தளபதி 69’ படம் இருக்கும் என அறிவித்தார். அவரின் கடைசி படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது, மேலும் இந்த படத்தை எச் .வினோத் இயக்குகிறார். இப்படத்தை KVN production தயாரிக்க உள்ளது. ‘தளபதி 69’ படத்திற்கான போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்க போவதாக செய்திகள் வருகின்றன.விஜய்யின் கடைசி படம் என்பதால் இரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார், இது விஜய்யுடன் அவரது ஐந்தாவது படமாகும். ‘தளபதி 69’ படம் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு அனுபவமாக இருக்கும் என எதிர்பார்ப்பு. ‘தளபதி 69′ பட போஸ்டரில் “ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் விரைவில் வருவார்” என்ற டேக்லைன் படத்தின் கதை குறித்த ரகசிய செய்தியைக் குறிக்கிறது.’தளபதி 69’ அக்டோபர் 2025 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் விஜயின் கடைசி படம் 2025 தீபாவளி பண்டிகைக்கு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


