நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கடந்த 18ஆம் தொடங்கியது. இந்தச் சிறப்புக் கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெற்று வந்தது. இன்று முழுக்க இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், தற்போது மக்களவயில் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் முடிவில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 454 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், 2 வாக்குகள் அதற்கு எதிராக பதிவாகியுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.