தீபாவளி முன்னிட்டு சிவகாசியில் ரூ.7,000 கோடி மதிப்பிலான பட்டாசு விற்பனை!

இந்திய வணிகம் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் பொருளாதாரம்

சிவகாசியில் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ.7,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் விற்பனையாகும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசியில்தான் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. கடந்த 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் ரூ.6,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்ற நிலையில், இவ்வாண்டு விற்பனை அளவு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.உற்பத்தியாளர்கள் தெரிவிப்பதாவது, தீபாவளி தேவை அதிகரிப்பு, புதிய வடிவங்களில் பட்டாசுகள் அறிமுகம், மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் காரணமாக, இந்தாண்டு வர்த்தகத்தில் பெரிய வளர்ச்சி பதிவாகியுள்ளது.சிவகாசி தற்போது இந்தியாவின் பட்டாசுத் தலைநகராக திகழ்கிறது; இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தீபாவளி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *