இஸ்ரேல், ஹமாஸ் போரால் கலையிழந்து காணப்படும் இயேசு கிறிஸ்து பிறப்பிடம்; கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இல்லாமல் வெறிச்சோடிய பெத்லகஹேம் நகரம்

அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மற்றவை முதன்மை செய்தி

இயேசு கிறிஸ்துவின் பிறந்த இடமாக கருதப்படும் பெத்லஹேம் பொதுவாக கிறிஸ்துமஸ் நாளில் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய நகரத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களை சமீபத்திய இஸ்ரேல் – ஹமாஸ் போர் பயமுறுத்தியுள்ளது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பரிசு கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அக்டோபர் 7 முதல் தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் பற்றிய செய்திகள் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து காசா மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல் மற்றும் மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்தது. ‘எங்கள் ஹோட்டலுக்கு விருந்தினர்கள் யாரும் வரவில்லை. ஒருவர் கூட இல்லை’ என்று அலெக்சாண்டர் ஹோட்டலின் உரிமையாளர் ஜோய் கனவதி என்பவர் வேதனையுடன் கூறினார். அவருடைய குடும்பம் பெத்லஹேமில் நான்கு தலைமுறைகளாக வசித்து வருகிறது.
பெத்லஹேமில் சிலுவை சிலைகள், மேரி சிலைகள் மற்றும் பிற மத சிற்றணி பொருட்களை விற்கும் ரோனி தபாஷ் என்ற நபர் தனது வேதனையை பதிவு செய்துள்ளார். ‘நாங்கள் எந்த யாத்ரீகர்களும், எந்த சுற்றுலா பயணிகளும் இல்லாமல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களை கடந்திருக்கிறோம். எங்கள் இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதிகாக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். பெத்லஹேம் அமைதியின் இடம், எனவே அது உலகம் முழுவதும் அமைதி பரவுவதற்கான தூதராக இருக்கும்’ என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *