சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2024: பட்டம் வென்றார் தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம்

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா விளையாட்டு

சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியை ஃபிடே ஆதரவுடன் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தியது. இந்த செஸ் தொடர் நவ.5 முதல் தொடங்கி 11ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.70 லட்சம் என ஆகும்.
இந்த கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் லெவோன் ஆரோனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் . டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற இந்த இறுதிச்சுற்றில் கடும் போட்டிக்கு இடையே 2-0 என்ற கணக்கில் லெவோன் ஆரோனை வீழ்த்தி அரவிந்த் சிதம்பரம் அசத்தினார்.
இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் லெவோன் ஆரோனை வீழ்த்திய அரவிந்த் சிதம்பரத்துக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *