ஒன்றிய வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் அஜய் பாது கூறியதாவது:ஏற்றுமதியாளர்கள் எளிதாக கடன் பெறுவதற்காக ஒன்றிய அரசு புதிய ஆதரவு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் ரூ.5181 கோடி வட்டி மானியத் திட்டமும், ரூ.2114 கோடி பிணைய ஆதரவும் சேர்த்து மொத்தம் ரூ.7295 கோடி அளவிலான ஏற்றுமதி ஆதரவு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.இந்த திட்டங்கள் 2025 முதல் 2031 வரை ஆறு ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். இதனால் ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் வர்த்தக நிதி தொடர்பான பிரச்னைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி மானியத் திட்டத்தின் மூலம், ஏற்றுமதியாளர்கள் பெற்ற கடன்களுக்கு வட்டியில் மானியம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

