நடிகர் விஜய் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘ஜன நாயகன்’ திரைப்படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 9 தேதி அன்று திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இதுவரை சான்றிதழ் வழங்காததால் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் உடனடி தீர்வு கிடைக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தனது தீர்ப்பை ஜனவரி 9 காலை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. தணிக்கை அனுமதி இன்றி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக முடியாததால், திட்டமிட்ட வெளியீட்டு தேதிக்கு திரைப்படம் வராது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பாக தமிழ்நாட்டில் முன்பதிவு டிக்கெட் விற்பனை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் புதிய வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

