தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர், சாயர்புரம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் தமிழர் பாரம்பரிய உடைகள் அணிந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் நடத்தும் “ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச்” சுற்றுலாவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த 29 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களே ஆட்டோக்களை ஓட்டி புதுச்சேரி, தஞ்சை, மதுரை வழியாக தூத்துக்குடி வந்தனர். அங்கு வேட்டி, சேலை அணிந்து தாங்களே அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து தமிழர் கலாச்சாரத்தை அனுபவித்து மகிழ்ந்தனர்.

