திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2025ஆம் ஆண்டு லட்டு விற்பனையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் மொத்தமாக 13.5 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய 2024ஆம் ஆண்டில் திருப்பதி கோயிலில் 12.15 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு அதைவிட அதிகமாக லட்டு விற்பனை நடைபெற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதும், திருவிழா காலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதும் இந்த சாதனைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

