பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்து அந்த நாட்டு அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அது கலவரமாக மாறியது. கலவரத்தை பயன்படுத்தி நேபாள சிறைகளில் இருந்து தப்பிய 13,000 கைதிகள் தப்பினர். தப்பிய கைதிகளில் 35 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது, இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேச எல்லையில் 22 கைதிகள், பீகார் எல்லையில் 10 கைதிகள், மேற்கு வங்க எல்லையில் 3 கைதிகள் இந்தியாவில் நுழைய முயன்ற போது, கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

