இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா சிறப்பு செய்திகள் பொருளாதாரம்

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து கொண்ட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளதாக நைட் ஃபிராங்க் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த எண்ணிக்கை வெறும் 7 ஆக இருந்தது, ஆனால் தற்போது 191 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 26 புதிய கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளனர்.உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் நைட் ஃபிராங்க் அமைப்பு சமீபத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலகளாவிய அளவில் பெரும் செல்வந்தர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் நைட் ஃபிராங்க் நிறுவனம் சமீபத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இந்தியாவில் 191 பேர் ரூ.100 கோடிக்கும் மேலான சொத்துகளை வைத்துள்ளனர். மேலும், 2024 ஆம் ஆண்டில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 6 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.உலகின் முன்னணி செல்வந்தர்களில் சுமார் 40 சதவிகிதம் பேர் ரூ.90 கோடிக்கும் மேலான சொத்து மதிப்புள்ள தனி நபர்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 2.24 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 2.34 லட்சமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.4 சதவிகிதம் அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *