அமெரிக்க அரசு 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் வட அமெரிக்கா வேலைவாய்ப்புச் செய்திகள்

அமெரிக்கா அரசின் செலவுகளை குறைக்க டொனால்டு ட்ரம்ப் 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகள் பரபரப்பையும், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சியையும் உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், தற்போது ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அதாவது, DOGE பரிந்துரையின் அடிப்படையில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான துறையில் 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்யும் முடிவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசு எடுத்துள்ளது. மேலும், இந்தத் துறைக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய உத்தரவு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்; பலர் வேலை இழக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *