அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் தெலங்கானாவை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.ஐதராபாத்தின் சைதாபாத் பகுதியை சேர்ந்த ஷேக் நவீத், தனது மனைவி நஸ்யா சல்மா மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தார்.இந்நிலையில், அவர்கள் பயணம் செய்த கார் எதிரே வந்த மற்றொரு வாகனத்துடன் மோதியது. இந்த கோர விபத்தில் நஸ்யா சல்மா, அவரது மகன் மற்றும் ஒரு மகள் உயிரிழந்தனர்.ஷேக் நவீத் மற்றும் அவரது இளைய மகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

