ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026; கிரிக்கெட் விளையாட்டில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்

இந்தியா இலங்கை உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பெண்கள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு ஜப்பான்

ஆசிய விளையாட்டு மகளிருக்கான கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இலங்கை அணி பந்துவீசியது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்திருந்தபோது ஷபாலி வர்மா 48 ரன்னில் ஆட்டம் இழந்தார். 28 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 48 ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஆடிய ஸ்மிருதி மந்தனா அரை சதம் கடந்து 79 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹர்மன்பிரீத் கவுர் 19 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரிச்சா கோஷ 22 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 49 ரன் குவித்தார். இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை களமிறங்கியது. இலங்கை அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாரியது. இலங்கை அணி 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சமாரி அதபத்து மட்டும் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மேலும் கவிஷா தில்ஹாரி 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தனர். மீதமுள்ள வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சரணி மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *