ஆகஸ்ட் 15, 79 வது சுதந்திர தின விழா ‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 12வது முறையாக தேசிய கொடி ஏற்றினார்.இதனைத்தொடர்ந்து சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் தீபாவளி பரிசாக அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை கொண்டு வரவுள்ளதாகவும் அவை நாடு முழுவதும் உள்ள வரி சுமையைக் குறைக்கும் எனவும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மலிவாக மாறும், இது நமது பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்” என்று பிரதமர் மோடி கூறினார். மேலும் விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் எனவும் கூறினார். மேலும் நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-சுதேசி என்ற கருத்து, மேக்-இன்-இந்தியா ஆகியவை தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் எனவே இந்திய பொருட்களை வாங்கவும், பயன்படுத்தவும் நாம் உறுதி ஏற்போம் எனக் கூறினார்.

